சென்னை நடிகை சோனியா அகர்வால் புதுப்பேட்டை 2 படம் குறித்துப் பேசி உள்ளார்.’ தனுஷுக்கு ஜோடியாக ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சோனியா அகர்வால் ‘கோவில்’, ‘மதுர’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘திருட்டு பயலே’ போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டில் தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவனைத் திருமணம் செய்துகொண்ட சோனியா அகர்வால், 2010-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். சோனியா அகர்வால் தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]