சென்னை: “கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக. கோவையில் சர்வதேச தரத்திலான ஸ்டேடியம் அமைக்கப்போவதாக கூறுவது, கோவை மக்களின் கைத்தட்டல்களைப் பெறுவதற்காக சொல்லப்பட்டுள்ள இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டிய ஒன்று”, என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். 2021-ம் ஆண்டில் அவர் அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தோல்வியை உணர்ந்த பிறகு மேலும் வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன்பு ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். திமுகவின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது.
கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக. கோவையில் சர்வதேச தரத்திலான ஸ்டேடியம் அமைக்கப்போவதாக கூறுவது, கோவை மக்களின் கைத்தட்டல்களைப் பெறுவதற்காக சொல்லப்பட்டுள்ள இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டிய ஒன்று”, என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில், உலகத் தரத்திலான கிரிக்கெட் மைதானம், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்”, என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். | விரிவாக வாசிக்க > ‘கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்’: முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி