ரஜினி 171 வது படத்தில் இணையும் நடிகர்-நடிகைகள்!
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்க போகிறார் ரஜினி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில், ஏப்ரல் 22ம் தேதி டைட்டில் வெளியாகிறது. இந்த நேரத்தில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அதில், ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினியுடன் ஒரு சிறிய ரோலில் நடித்த திரிஷா, தளபதி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஷோபனா மற்றும் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆகியோர் ரஜினி 171வது படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.