தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்காமல், என்னை நீக்கினார்கள் – கவுதம் கம்பீர்

சிஎஸ்கே, கேகேஆர் மோதல்

ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத இருக்கின்றன. இரு அணிகளும் சம பலம் பொருந்திய அணிகளாக இருந்தாலும், இப்போதைய ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலை பொறுத்தவரை கேகேஆர் அணி தான் டாப்பில் இருக்கிறது. அந்த அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகளில் 2 வெற்றி இரண்டு தோல்விகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கும், ஒருவேளை சென்னை அணி வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்துக்கும் முன்னேறும். 

கவுதம் கம்பீர் புகழாரம்

இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து கவுதம் கம்பீர் புகழந்து பேசியிருப்பது வைராலகியுள்ளது. இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் தோனி தான் என்று தெரிவித்திருக்கும் கம்பீர், அவரைப் போல் இன்னொரு கேப்டன் இந்திய அணிக்கு கிடைக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் எல்லாம் இனி வரும் காலங்களில் இந்திய அணி வென்றாலும் ஐசிசி நடத்தும் 3 கோப்பைகளையும் வென்ற கேப்டனாக இருக்கும் தோனியின் சாதனையை சமன் செய்வது அல்லது அவருக்கு நிகராக உயர்வது என்பது சாத்தியமே இல்லை என புகழாரம் சூட்டியுள்ளார்.

தோனியை விமர்சித்த கம்பீர்

April 8, 2024

ஆனால், இந்த பேட்டிக்கு முன்பு வரை தோனியை கடுமையாக விமர்சித்து வந்தவர் கவுதம் கம்பீர். தன்னை இந்திய அணியில் இருந்து நீக்கியது தோனி என்பதை ஆணித்தரமாக தெரிவித்து வந்த அவர், தோனியால் மட்டுமே உலக கோப்பை இந்திய அணி வென்றது என்பதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என அதிரடியாக பேசி வந்தார். 2011 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பை வென்றது என்பது ஒரு அணியின் சிறந்த ஆட்டமே தவிர தனிப்பட்ட தோனியால் மட்டும் உலக கோப்பை கிடைத்துவிட வில்லை என கம்பீர் கூறி வந்தார். சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், கம்பீராகிய நான் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடியதால் மட்டுமே அந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்ல முடிந்தது என்றும் தெரிவித்து வந்தார்.

பிசிசிஐக்கு கம்பீரின் கேள்வி

ஆனால், அந்த உலக கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தபோது பிசிசிஐ தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து பிசிசிஐ நீக்கவில்லை என தெரிவித்த கம்பீர், அப்போது துணைக் கேப்டனாக இருந்த என்னை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, அணியில் இருந்தும் நீக்கினார்கள். அந்த இடத்துக்கு விராட் கோலியை கொண்டு வந்தார்கள். அதில் என்ன லாஜிக் இருந்தது என தெரியவில்லை என்றும் கவுதம் கம்பீர் பேசியிருந்தார். இதன் பின்னணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. தோனிக்கு கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியிருக்கும் இந்த நேரத்தில், அவரை கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோவும் வைரலாகியுள்ளது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.