சென்னை: நெல்லை ரயிலில் ரூ.4 கோடி அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பொதுமக்களுக்கு வேட்பாளர்கள் தரப்பில் வாக்குக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் […]