பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் 650மில்லியன் ரூபா செலவில் பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிடிய பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் மாவட்ட மட்டத்தில் பால் தயாரிக்கும் மத்திய நிலையத்தை நிருமாணிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, பிரதேசத்திற்கான பால் தயாரிக்கும் 6 மத்திய நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்;கை எடுத்துள்ளதுடன் அதன் மூன்றாம் நிலையம் திறக்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.
தமன்கடுவ பிரதேசத்தின் 8000 பால் உற்பத்தியாளர்களின் அங்கத்துவத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கத்தினால் இத்தொழிற்சாலைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இதற்காக 650 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்கள், பிரான்ஸ் நாட்டின் தூதுவர் பெக்டேட் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.