CSK vs KKR: ரஹானே நீக்கம்! முன்பே களமிறங்கும் தோனி! சென்னை அணியில் மாற்றங்கள்!

CSK vs KKR Live score: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் விளையாடுகிறது.  ஆர்சிபி மற்றும் ஜிடி அணிகளுக்கு எதிராக சொந்த மைதானத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து.  இரண்டு தொடர் தோல்விகளுக்கு இடையில் பலம் வாய்ந்த கொல்கத்தா அணியுடன் இன்று சென்னையில் விளையாடுகிறது சிஎஸ்கே. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் மீண்டும் வெற்றி பாதையில் திரும்ப கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.  முந்தைய இரண்டு போட்டிகளில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக டாப் ஆர்டர் பேட்டிங் இருந்தது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல் போன்றவர்கள் எதிர்பார்த்த தாக்கத்தை அணிக்கு ஏற்படுத்தவில்லை. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மூன்று மாற்றங்களை செய்து இருந்தது.  மதீஷா பத்திரனா காயம் காரணமாக வெளியேறினார், அவருக்கு பதில் மொயீன் அலி நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்தார். அதே போல முஸ்தாபிசுர் ரஹ்மானின் விசா பிரச்சனைகளை முடிக்க தாயகம் திரும்பினார்.  அவருக்கு பதில் முகேஷ் சவுத்திரி சேர்க்கப்பட்டார்.  இன்றைய போட்டியில் ரஹ்மான் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. அதே சமயம் பார்மில் இல்லாதா ரஹானே வெளியேற வாய்ப்புள்ளது.

Whistles Ready for the Blockbuster Show tonight!#CSKvKKR #WhistlePodu #Yellove  pic.twitter.com/84JPtVGqwZ

— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2024

கேகேஆருக்கு எதிராக இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் நல்ல பேட்டிங்கை கொடுக்க வேண்டும். முதல் இரண்டு போட்டிகளில் ரச்சின் சிறப்பாக விளையாடி இருந்தார். அஜிங்க்யா ரஹானே 3-வது இடத்தில் பேட்டிங் செய்யும் போது ரன்கள் அடிக்க சிரமப்படுகிறார்.  அந்த இடத்தில் சமீர் ரிஸ்வி களமிறங்க வாய்ப்புள்ளது.  இருப்பினும், சிஎஸ்கே என்ன முடிவு செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அதே போல தோனி பேட்டிங் ஆர்டரில் முன்னணியில் களமிறங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.  டெல்லிக்கு எதிராக 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்து இருந்தார் தோனி.

ஷிவம் துபே 4-வது இடத்தில் நன்றாக விளையாடி வருகிறார். அவரை தொடர்ந்து டேரில் மிட்செல் 5-வது இடத்தில் நல்ல பேட்டிங்கை கொடுக்க வேண்டும்.  பத்திரனா இன்று விளையாடினால் மொயின் அலி நீக்கப்பட வேண்டும். அதே போல ரவீந்திர ஜடேஜாவும் பேட்டிங்கில் மிகவும் சிரமப்படுகிறார். பவுலிங்கில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா நன்றாக விளையாட வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்ததேச அணி: ருதுராஜ் கெய்க்வாட் (C), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே / சமீர் ரிஸ்வி, ஷிவம் துபே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.