Karthi: `சர்தார் 2', `கைதி 2', `தீரன் அதிகாரம் இரண்டு' – கார்த்தியின் அடுத்தடுத்த திட்டங்கள்!

கார்த்தியின் 25வது படமான `ஜப்பான்’ தோல்விக்குப் பிறகுத் தனது அடுத்தடுத்த படங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இப்போது அவர் `96′ படத்தின் இயக்குநர் பிரேம்குமாரின் படம் (`மெய்யழகன்’ என்பதாகத் தகவல்), நலன் குமாரசாமியின் இயக்கத்தில் ஒரு படம் (`வா வாத்தியாரே’ என்பதாகத் தகவல்) என்பதாக நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் `தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார், `சர்தார் 2’விலும் நடிக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவரது லைன் அப்கள் குறித்த அப்டேட் இனி…

கார்த்தி

இப்போது கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தில் வித்தியாசமான காம்பினேஷனில் நடிகர்கள் இருக்கிறார்கள். வில்லனாக அரவிந்த்சாமியுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ஶ்ரீதிவ்யா, ராஜ்கிரண் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே வீச்சில் நடந்து முடிந்திருக்கிறது. ’96’ பிரேம்குமார் இயக்கியுள்ள இப்படம், எமோஷனலான ஒரு கதையாக உருவாகியிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்த வேகத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. ’96’ கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதும், அதன் டீசரை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து கார்த்தி, நலன் குமாரசாமியின் இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’வில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ஆனந்த்ராஜ் எனப் பலரும் நடித்து வருகிறார்கள். கார்த்தி ‘ஜப்பான்’ படத்தில் நடிக்கும் போதே, இதன் படப்பிடிப்பும் ஆரம்பித்தது. அதன் பின், இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பிற்குப் பின் கார்த்தி பிரேம்குமாரின் படத்திற்குச் சென்றார். அதனை முழுவீச்சில் முடித்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் இதன் படப்பிடிப்பைத் தொடர்ந்தார். இப்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த மாதத்தோடு இதன் படப்பிடிப்பும் நிறைவடையும் என்கிறார்கள்.

கார்த்தி

‘வா வாத்தியாரே’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு உடனடியாக ‘சர்தார் 2’ படத்திற்கு வருகிறார் கார்த்தி. கார்த்தியின் திரைப்பயணத்தில் தோற்றத்தை மாற்றி நடித்த படங்களின் பட்டியலில் ‘சர்தார்’ படத்திற்குத் தனியிடம் உண்டு. இதன் வெற்றியைத் தொடர்ந்து ‘சர்தார் 2’வைத் தொடங்குகிறார்கள். அநேகமாக ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பை எதிர்பார்க்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. ‘சர்தார்’ படத்தை முடித்துவிட்டு சமீபத்தில் ஹிட் கொடுத்த மற்றொரு இயக்குநரின் படத்திலும் நடிக்க உள்ளார். அதன் பிறகு, ‘தீரன் அதிகாரம் இரண்டு’ அல்லது ‘கைதி 2’ இரண்டில் எதாவது ஒன்று தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.