சென்னை: “அண்ணன் ஆர்.எம். வீரப்பன், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எம்ஜிஆர் கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.அண்ணன் ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதே போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் ஆர்.எம். வீரப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.