ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரில் கூடுதலாக புதிய டைட்டன் கிரே நிறத்துடன் இன்டிரியரில் பிளாக் நிறத்தை ஆப்ஷனலாக பெற்றதாக வந்துள்ளது.
தற்பொழுது D2C முறையில் ஆன்லைனில் புக்கிங் துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.1,00,000 லட்சம் ஆக வசூலிக்கப்படுகின்றது.
Hyundai Ioniq 5
முந்தைய காரில் எந்தவொரு டிசைன் மாற்றங்களும் இல்லை, புதிய நிறம் மட்டும் சேர்க்கப்பட்டு பவர்டிரெயின் ஆப்ஷனை கொண்டுள்ளது. Ioniq 5 மாடலில் 215 bhp மற்றும் 350 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மின்சார மோட்டார் மூலம் ரியர் வீல் டிரைவ் மட்டுமே உள்ளது. இந்த மாடலில் 72.6 kWh பேட்டரி பேக்குடன் அதிகபட்சமாக 631 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுகின்ற காரில் டைட்டன் கிரே, மிட்நைட் பிளாக் பெர்ல், ஆப்டிக் ஒயிட் மற்றும் கிராவிட்டி கோல்ட் மேட் என நான்கு நிறங்களை கொண்டுள்ளது. உட்புறத்தில், டார்க் பெப்பிள் கிரே இன்டீரியர் வண்ணத்துடன், கூடுதலாக புதிய அப்சிடியன் பிளாக் நிறத்தை கூடுதலாக வழங்கப்படலாம்.
12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் சென்ட்ரல் டச்ஸ்கிரீன், சூடான மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள், இரட்டை ஜோன் ஏசி கட்டுப்பாடு, ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர், இணைக்கப்பட்ட கார் வசதிகள் உள்ளன.
மற்றபடி, விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் விலை ரூ.46.02 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) விற்பனைக்கு கிடைக்கின்றது.