தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார்
எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், முன்னாள் அதிமுக அமைச்சரும், தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98.
பட அதிபர்
புதுக்கோட்டையில் பிறந்த இவர், எம்.ஜி.ஆர்., அமைச்சரவையிலும், ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக இடம்பெற்று இருந்தார். கே.ஆர்.ஆர்., நாடகக் கம்பெனியில் கணக்கு பிள்ளையாக பணியாற்றினார். பின்னர் எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகினார். எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் மேலாளராக இருந்தார். சத்யா மூவீஸ் பட நிறுவன அதிபராகவும் இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்த படங்களை தயாரித்துள்ளார்.
வயது மூப்பு
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு 1995ல் எம்.ஜி.ஆர்., கழகம் என்ற பெயரில் கட்சி துவக்கி நடத்தி வந்தார். வயது மூப்பு காரணமாக சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று(ஏப்., 9) சிகிச்சை பலனின்றி காலமானார்.