அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , கோவளம் ,  காஞ்சிபுரம் மாவட்டம் 

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , கோவளம் ,  காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவளம் என்னும் ஊரில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 74 கி.மீ தொலைவில் கோவளம் என்னும் ஊர் உள்ளது. கோவளத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்புகள் இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், பிதுர்தோஷ நிவர்த்திக்காக அமாவாசையன்று கடலில் நீராடி இத்தல மூலவரை வழிபடுகிறார்கள். புரட்டாசி மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டை செய்வது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். திருமணமாகாத ஆண்கள், சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தீஸ்வரருக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர். இக்கோயிலில் பௌர்ணமி நாட்களில் சிவன் மற்றும் அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும். இக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சமேத முத்துக்குமாரர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் சத்தியநாராயணர் சங்கு சக்கரத்துடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.