உலகின் வயதான மனிதர் பெருவில் வாழ்கிறார்: 1900-ம் ஆண்டில் வாழ்ந்தவர்

லிமா: பெரு நாட்டில் 1900-ம் ஆண்டு பிறந்த மார்சிலினோ அபாட் உலகின் மிகவும் வயதான நபராக நம்பப்படுகிறார்.

மார்சிலினோ அபாட், மத்திய பெருவின் ஹுவானுகோ நகரில் பிறந்தவர். தாவரங்கள் மற்றும்விலங்கினங்கள் சூழ்ந்து காணப்படும் இயற்கை சூழல்நிறைந்த அப்பகுதியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகாணப்படுகிறது. இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பிறந்துள்ளதை ஆவணங்கள் மூலம் பெருவியன் அதிகாரிகள் கடந்த 2019-ம்ஆண்டில்தான் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தன்னுடைய 124-வது பிறந்த நாளை அடையாளப்படுத்தும் மெழுகுவர்த்தி மற்றும் தனது உருவத்தில் செய்யப்பட்ட மாதிரி பொம்மையுடன் அண்மையில்தான் மார்சிலினோ கேக்வெட்டி மகிழ்ச்சியுடன் பிறந்த தினத்தை கொண்டாடினார். மர்சிலினோ மிகவும் வயதானவர் என்ற பிரிவில் உலக சாதனைக்கு விண்ணப்பிக்க தேவையான உதவிகளை செய்துதருவதாக பெருவியன் அதிகாரிகள் உறுதி யளித்துள்ளனர்.

இதுதொடர்பாக கின்னஸ் சாதனை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கின்னஸ் உலக சாதனைக்காக மிகவும் வயதான நபர் என்று கூறும் நபர்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆனால், அதுதொடர்பான உரிமைகோரலை சரிபார்ப்பது, அவர்களின் சாதனையை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிப்பதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும். அந்த குழு தேவையான ஆதாரங்களை ஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கும்’’ என்றார்.

114 வயதான வெனிசுலாவைச் சேர்ந்தவர் இறந்த பிறகு கின்னஸ் சாதனை புத்தகத்தில் மிகவும் வயதானவர் பிரிவில் 111 வயதான பிரிட்டனைச் சேர்ந்தவர் உள்ளார்.

கின்னஸ் சாதனை: இந்த நிலையில், பெரு நாட்டைச் சேர்ந்த மார்சிலினோ அபாட் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பித்து அவரது தேர்வு உறுதி செய்யப்படும்போது அபாட்டே உலகின் மிக வயதான நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.