பஜாஜ் ஆட்டோவின் பிரீமியம் பல்சர் என்எஸ்400 (Bajaj Pulsar NS400) பைக்கினை விற்பனைக்கு வெளியிட தயாராகி வரும் நிலையில் மே மாதம் 3 ஆம் தேதி சந்தைக்கு வரக்கூடும் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தையில் உள்ள கேடிஎம் ஆர்சி 390, 390 அட்வென்ச்சர், டாமினார் 400 உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 373cc என்ஜின் உள்ளது. புதிதாக வந்த 390 டியூக்கில் 399சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டில் எந்த என்ஜின் பொருத்தப்படும் எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை.
எற்கனவே சந்தையில் உள்ள பல்சர் என்எஸ்200 பைக்கில் உள்ள வடிவமைப்பினை தழுவியதாக வரவுள்ள 400 என்எஸ் பைக்கில் தொடர்ந்து ஸ்போர்ட்டிவான எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்பிளிட் சீட், எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் வரக்கூடும்.
ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது மொபைல் சிகனல், பேட்டரி இருப்பு, கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளும் மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கொடுப்பதனால் வழி தெரியாத இடங்களிலும் இலகுவாக பயணிக்க உதவும்.
முன்புறத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் மோட்ஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெறக்கூடும்.
புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்400 விலை ரூ. 2.40 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.