ஹூண்டாய் இந்தியாவின் பிரசத்தி பெற்ற 2024 கிரெட்டா எஸ்யூவி வெளியிடப்பட்ட மூன்று மாதங்களுக்குள் 1,00,000 அதிகமான முன்பதிவுகளை பெற்று மாதந்தோறும் 13,000க்கு அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் கிரெட்டா ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. தொடர்ந்து இந்த மாடலுக்கு அதிகரித்து வரும் வரவேற்பினால் முன்பதிவு எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா மாடலின் வேரியண்டில் குறிப்பாக சன்ரூஃப் பொருத்தப்பட்ட மாடலை 71 சதவீத பேர் முன்பதிவு செய்துள்ளனர். 52 சதவீதத்திற்கும் அதிகமான வாங்குபவர்கள் மிட் மற்றும் டாப் வகைகளில் கிடைக்கின்ற கனெக்ட்டேட் கார் தொழில்நுட்பத்துடன் கூடிய வேரியண்டுகளை வாங்க விரும்புகிறார்கள் என ஹூண்டாய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2024 ஹூண்டாய் கிரெட்டா காரின் ஆன்ரோடு விலை ரூ.14 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரை உள்ளது. கூடுதலாக பெர்ஃபான்ஸ் ரக கிரெட்டா என்-லைன் வேரியண்டும் கிடைக்கின்றது.
பாதுகாப்பு வசதிகளில் ஹூண்டாய் கிரெட்டா ஸ்மார்ட் சென்ஸ் ADAS Level 2 மூலம் முன்புற மோதலை தவிரக்கும் எச்சரிக்கை, ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் செட் அன்ட் கோ, பிளைன்ட் ஸ்பாட் வியூ உள்ளிட்ட 19க்கு மேற்பட்ட வசதிகள் பெற்றுள்ளது.