தமிழில் நாம் பார்த்து ஹிட் அடித்த பல படங்களிலும் நடிகர்கள் கச்சிதமாகப் பொருந்தியிருப்பார்கள். நன்றாகவும் நடித்து ரசிகர்களையும் மகிழ்வித்திருப்பர்.
ஆனால், அந்தப் படங்களில் வேறு சில நடிகர்கள் முதலில் நடிப்பதாக இருந்து பிறகு விலகியிருப்பார்கள். நடிகர்கள் பலர் பல தவிர்க்கமுடியாத காரணங்களால் பல படங்களைத் தவறவிட்டிருப்பார்கள். தேதி பிரச்னைகள் தொடங்கி பல விஷயங்கள் அவரவர் திரைப்படங்களைத் தவறவிட்டதற்குக் காரணமாக இருக்கும். அதில் சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த பிறகு அது தொடர்பாக வருந்தியதாக நேர்காணல்களில் பல நடிகர்கள் கூறியிருக்கிறார். அப்படி சில தமிழ் நடிகர்கள் தவறவிட்டு வேறு ஒரு நடிகர் நடித்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்களின் லிஸ்டைப் பார்க்கலாம்.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ரன் திரைப்படம் முதலில் நடிகர் ஶ்ரீகாந்திடம்தான் வந்திருக்கிறது. இதுமட்டுமின்றி , மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஆய்த எழுத்து’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமும் இவருக்கு வந்திருக்கிறது. ‘அம்மா நானா ஒ தமிழ் அம்மாயி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்தான் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் ‘எம்.குமரன்.சன் ஆஃப்.மஹாலட்சுமி’. இந்த திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிக்கவிருந்தது ஶ்ரீகாந்த்தான். இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன், டிஷ்யூம் ஆகிய திரைப்படங்களும் இவரிடம் வந்திருக்கிறது. இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித்தான் நடிக்கவிருந்தது. அஜித் விலகிய பிறகு அத்திரைப்படம் ஶ்ரீகாந்தை வந்தடைந்திருக்கிறது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டரான ‘வின்னைதாண்டி வருவாயா’ திரைப்படம் முதலில் நடிகர் ஜெய்யிடம்தான் வந்திருக்கிறது. இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்தையும் ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் கெட்டப்பில் இருந்ததால் மிஸ் செய்துவிட்டார். நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருந்த ‘ராட்சசன்’ திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜெய்தான். அவர் விலகிக் கொண்டப் பிறகு இத்திரைப்படம் விஷ்ணு விஷாலிடம் சென்றிருக்கிறது.
அஜித்,மம்மூட்டி,அப்பாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2000-ல் வெளியான திரைப்படம், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்த படத்தில் முதலில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகர் பிரசாந்த்.
பிரசாந்த் நடித்திருந்த ஜீன்ஸ் திரைப்படம் முதலில் நடிகர் அப்பாஸிடம் வந்திருக்கிறது. அப்போது நடிகர் அப்பாஸின் பிஸியான கால்ஷீட்டால் இந்தப் படத்தை தவறவிட்டிருக்கிறார். மேலும் விஜய் நடித்திருந்த ‘காதலுக்கு மரியாதை’ படமும் இவரிடம் வந்திருக்கிறது.
இந்த வரிசையில் நடிகர் ஷாந்தனுவும் பல படங்களை மிஸ் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவரிடம்தான் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘ காதல்’ திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், சசிகுமார் இயக்கத்தில் உருவான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படமும் இவருக்குதான் முதலில் வந்திருக்கிறது.
மேலும், நடிகர் பரத்தும் சில படங்களை மிஸ் செய்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடித்திருந்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ திரைப்படம் இவரிடம்தான் வந்திருக்கிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் ஹிட்டடித்த ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படமும் முதலில் மிர்ச்சி சிவாவிடம்தான் வந்திருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி, நடிகர்கள் தவறவிட்ட திரைப்படங்கள் லிஸ்டில் உங்களுக்கு தெரிந்தவற்றை கமென்ட்டில் பதிவிடுங்கள்.