புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் GX (O) வேரியண்டில் 8 இருக்கை உள்ள வகை ரூ.20.99 லட்சம் மற்றும் 7 இருக்கை உள்ள வகை ரூ. 21.13 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள GX மற்றும் ஹைபிரிட் VX வேரியண்டுகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ள மாடலில் 16.3 கிமீ மைலேஜ் வழங்குகின்ற 174hp மற்றும் 205Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
முன்புறத்தில் எல்இடி பனி விளக்குகள், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் பின்புற டிஃபோகர் போன்றவற்றுடன் உட்புறத்தில் செஸ்நட் தீம் டேஸ்போர்டு, கதவுகளில் மென்மையான தொடு பொருட்கள் மற்றும் புதிய துணி இருக்கை கவர் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு, 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
8 இருக்கை பெற்ற வேரியண்டில் 10.1-இன்ச் தொடுதிரை, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, சன் சேட் வசதிகள் இடம்பெறவில்லை. இன்று முதல் இன்னோவா ஹைக்ராஸ் GX (O) டீலர்களிடம் கிடைக்க துவங்கியுள்ளது.
புதிய இன்னோவா ஹைக்ராஸ் பெட்ரோல் GX (O) சிறந்த தரம் மற்றும் கொள்கைக்கு ஒரு சான்றாகும், இது மேம்பட்ட வசதி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஆடம்பர மற்றும் செயல்திறனுடன் கவனமாக சேர்க்கப்பட்டு, 10+ அம்சங்கள் முழுமையாக பெட்ரோல் பதிப்பைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வளர்ந்து வரும் வாழ்க்கை முறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கவர்ச்சிகரமான முன்மொழிவுடன் வலுவாக எதிரொலிக்கும் என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் சபரி மனோகர் (Vice President, Sales-Service-Used Car Business) தெரிவித்துள்ளார்.