இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் எஸ்யூவி உட்பட C-வகை எஸ்யூவி மற்றும் எம்பிவி என இரு மாடல்களுக்கான டிசைன் காப்புரிமை பெற்றுள்ளதால் 2025 முதல் தனது மாடல்களை கொண்டு வரவுள்ளது.
ஃபோர்டு இந்திய சந்தையை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் தனது மாடல்களுக்கான டிசைன் மற்றும் பெயர்களுக்கான காப்புரிமையை பதிவு செய்திருப்பதுடன் கூடுதலாக சென்னை தொழிற்சாலையை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதால், முதல் எஸ்யூவி எவரெஸ்ட் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாகலாம்.
ஃபோர்டு எவரெஸ்ட்
சர்வதேச அளவில் ஃபோர்டின் எவரெஸ்ட்டில் 2.0 லிட்டர் டர்போ டீசல், 2.0 லிட்டர் பை டர்போ டீசல் மற்றும் 3.0 லிட்டர் V6 டர்போ டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை பெற்றுள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் அல்லது 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்று 4×2 மற்றும் 4×4 என இரு விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற பிரீமியம் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டெருக்கு எதிராக வரவுள்ள எவரெஸ்டின் விலை ரூ.35 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் துவங்கலாம்.
ஃபோர்டு எஸ்யூவி
முன்பாக இந்திய சந்தையில் செயல்பட்டு வந்த பொழுது மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணியில் தயாரிக்கப்பட்ட எஸ்யூவி டிசைனுக்கான காப்புரிமை மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த எஸ்யூவி ரூ.10 முதல் ரூ.20 லட்சம் விலைக்குகள் ஒரு புதிய எஸ்யூவி வெளியிடலாம் என எதிர்பார்க்கின்றோம்.
ஃபோர்டு எம்பிவி
ஃபோர்டு சமீபத்தில் மற்றொரு எம்பிவி மாடலுக்கான டிசைன் காப்புரிமை பெற்றுள்ளதால், இந்த மாடல் இந்திய சந்தையில் கிடைக்கின்ற கியா கேரன்ஸ், XL6, எர்டிகா, ருமீயன் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. ஃபோர்டின் எம்பிவி விலை ரூ.11 லட்சத்தில் துவங்கலாம்.