சென்னை , வில்லிவாக்கம் ,அகஸ்தீஸ்வரர் கோயில். சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ளது அகஸ்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக அகஸ்தீஸ்வரர் காட்சி தருகிறார். உற்சவர் சோமஸ்கந்தர், தாயார் ஸ்வர்ணாம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இந்தக் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம், கார்த்திகையில் 1008 சங்காபிஷேகம், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் ஆகிய நாட்களில் திருவிழா நடைபெறுகிறது. தல சிறப்பு: அம்பிகையின் நேரடி பார்வையில் குரு பகவான் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் அம்பிகையை வேண்டினால், குருவின் பார்வை கிடைக்கும். குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அதற்கேற்ப இந்தக் கோயில் காணப்படுகிறது. குரு பகவானால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும். இந்தக் கோயில் தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். ஆகையால், இந்தக் கோயிலை செவ்வாய்கோயில் என்று அழைக்கிறார்கள். பொதுவான தகவல்: கோயில் பிரகாரத்தில் நடராஜர், பைரவர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வில்வாம்பிகை, ஆதிசங்கரர், நால்வர் சன்னதிகள் உள்ளன. வேண்டுதல்: செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள், பயந்த குணம் கொண்டவர்கள் ஆகியோர் இந்தக் கோயிலில் வழிபாடு செய்தால் பலன் உண்டாகும் என்பது ஐதீகம். தல பெருமை: அகத்திய முனிவருக்கு சிவபெருமான், அம்பிகையுடன் காட்சி கொடுத்த போது அம்பாள் திருமணக் கோலத்தில் தங்க நகைகள் அணிருந்திருந்தாள். ஆகையால் ஸ்வர்ணாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். இவளது […]