தேசிய ரீதியாக மரக்கன்றுகள் நடுவதற்கான சுபவேளை நாளை காலை 10மணி 16 நிமிடத்தில் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு அவசியமான மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான விதைகளை விதைக்கும் முன்னோடி நிகழ்வு அண்மையில் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
ஏப்ரல் 18ஆம் திகதியில் காணப்படும் சுபநேரத்திற்கு மரக்கன்றொன்று நிகழ்வையொட்டியதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் 100,000 வீட்டுத் தோட்டங்களும், விவசாயத் திணைக்களத்தினால் 30,000 தோட்டங்களும் உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறே சிறிய தேயிலைத்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையினால் தேயிலை உற்பத்திக்காக ஒரு மில்லியன் தேயிலைக்கன்றுகளையும் விவசாயத் திணைக்களத்தினால் 1.7 மில்லியன் பாக்கு மரங்களையும் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது