யமஹா நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஏரோக்ஸ் 155cc (Aerox) மேக்ஸி ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டரில் கூடுதலாக ஸ்மார்ட் கீ வசதி இணைக்கப்பட்ட மாடலை Version S என்ற பெயரில் ரூ.1.51 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கீ பெறப்பட்ட ஏரோக்ஸ் வெர்ஷன் எஸ் வேரியண்டில் சில்வர் மற்றும் ரேசிங் ப்ளூ என இரு நிறங்களை கொண்டதாக கிடைக்கின்றது.
2024 Yamaha Aerox 155cc Version S
என்ஜின் உட்பட அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ள OBD2 மற்றும் E20 ஆதரவு பெற்ற VVA வசதியை கொண்ட 155cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 15bhp பவர் வெளிப்படுத்த 8000rpm-லும் மற்றும் 13.9Nm டார்க் 6,500rpm-ல் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் CVT கியர்பாக்ஸுடன் வருகின்றது.
யமஹாவின் ஸ்மார்ட் கீ நுட்பத்தின் மூலம் சிறந்த பாதுகாப்பு, இலகுவாக ஸ்கூட்டரை அனுகவும் மற்றும் சிறப்பான ரைடிங் மேம்பாடாக அமைய உள்ளது.
- கீலெஸ் அனுகல் மூலம் ஏரோக்ஸ் ஸ்கூட்டரை கீ இல்லாமல் ரீமோட் கீ மூலம் ஸ்டார்ட் செய்யலாம்.
- Answer Back என்ற வசதியின் மூலம் நெரிசல் மிகுந்த பார்க்கிங் உள்ள இடத்தில் வாகனத்தை இலகுவாக அறிந்து கொள்ள எல்இடி பிளாஷர் மற்றும் பஸர் ஒலி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.
- immobilizer function எனப்படுகின்ற வசதியின் மூலம் திருட்டை தடுக்கும் வசதி பெற்றுள்ளது.
டிராக்ஷன் கண்ட்ரோல் வசதியுடன் ஏரோக்ஸ் 155 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று பிரேக்கிங் முறையில் 230 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 110/80-14 முன்புற டயர் மற்றும் 140/70-14 பின்புற டயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஏப்ரிலியா SXR160 மாடலை எதிர்கொள்வதுடன் வரவுள்ள ஹீரோ ஜூம் 160 மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு. ஈஷின் சிஹானா கூறுகையில், “ஏரோக்ஸ் 155 Version S அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அமோக வரவேற்பினை பெற்று வெற்றி பெற்றுள்ளது. சிறப்பான ஈர்க்கக்கூடிய செயல்திறன் மற்றும் அசாதாரண வடிவமைப்பால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி அடையும் நகரங்களுக்கு ஏற்ப, திறமையான போக்குவரத்து தீர்வுகளின் தேவை கணிசமாக வளர்ந்துள்ளது, யமஹாவை புதுமைகளை செயல்படுத்த தூண்டுகிறது. இது ரைடர்களின் வளர்ந்து வரும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் தேவைகளையும் மிஞ்சும் வகையில் இருக்கும் என குறிப்பிட்டார்.