89 ரன்னில் ஆல் அவுட்டான குஜராத் அணி! எளிதாக வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!

Gujarat Titans vs Delhi Capitals: இந்தியன் பிரீமியர் லீக்கின் 32வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது. இரண்டு அணிகளுக்கும் வெற்றி தேவை என்பதால் இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். குஜராத் அணியில் கடந்த போட்டியில் விளையாடாத சஹா மற்றும் மில்லர் அணிக்கு திரும்பினர். உமேஷ் யாதவிற்கு பதிலாக சந்தீப் வாரியர் அறிமுகமானார். டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர் இடம் பெறவில்லை. 

பிட்ச் மிகவும் மெதுவாக இருந்ததால் குஜராத் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  கேப்டன் சுப்மான் கில் 8 ரன்களுக்கு அவுட் ஆக, சாய் சுதர்சன் எதிர்பாராத விதமாக 12 ரன்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். விக்கெட் கீப்பர் சகா மற்றும் டேவிட் மில்லர் இரண்டு ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர். இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய தமிழக வீரர் சாருக்கான் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.  பின்பு கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரஷித் கான் 24 பந்திகளில் 31 ரன்கள் அடித்தார். இறுதியில் குஜராத் அணி 17.3 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

 to win following a  effort with the ball  pic.twitter.com/hkfo147orb

— Delhi Capitals (@DelhiCapitals) April 17, 2024

டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் மூன்று விக்கெட்களையும், இஷாந்த் சர்மா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். எளிதான இலக்கை எதிர்த்து ஆடினாலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிரடியாக விளையாடிய ஜேக் ஃப்ரேசர் 20 ரன்களிலும், சாய் ஹோப் 19 ரன்களுக்கும் அவுட் ஆகி வெளியேறினர். பின்பு கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் சுமித் குமார் இணைந்து 8.5 ஓவரில் 92 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர்.  இறுதியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

Back-to-back wins on the road  pic.twitter.com/2L7IM7kqbF

— Delhi Capitals (@DelhiCapitals) April 17, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.