சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘அன்பே வா’. இந்தத் தொடரின் நாயகன் விராட். இந்த சீரியல் 2020 ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் நடித்ததால் விராட்டிற்கெனத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. விராட்டிற்கும், நவீனா என்பவருக்கும் இன்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. நவீனா மேக்கப் ஆர்ட்டிஸ்ட். செலிபரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
‘அன்பே வா’ தொடரில் வருண் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த விராட் பீச் ரெசார்ட்டில் தனது காதலியைக் கரம் பிடித்திருக்கிறார். பெரியவர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்ற இத்திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.