ஐரோப்பா சந்தையில் புதிய சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மற்றும் eC3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross) எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல் முற்றிலும் மாறுபட்ட டிசைன் அம்சங்களை பெற்றிருந்தாலும் இரு மாடல்களும் ஒரே ஸ்டெல்லானைட்ஸ் ஸ்மார்ட் கார் பிளாட்பாரத்தில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய சந்தையில் தற்பொழுது பெட்ரோல் மட்டும் உள்ள அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் c3 ஏர்கிராஸ் இவி மாடல் ஆனது அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு வெளியாகலாம். அதேபோல தற்பொழுது ஐரோப்பா சந்தையில் வெளியிடப்பட்டுள்ள மாடல் பெட்ரோல் மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் வெர்ஷனிலும் வெளியிடப்பட்டிருக்கின்றது.
4,390 மிமீ நீளம் கொண்டுள்ள சி3 ஏர்கிராசில் முன்புறத்தில் C வடிவத்தை நினைவுபடுத்துகின்ற எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் கூடுதலாக எல்இடி பிராஜெக்டர் ஹெட் லைட் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
தற்பொழுது பவர்டிரையின் சார்ந்த அம்சங்கள் மற்றும் இன்டீரியர் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை. இந்த மாடலில் இடம்பெற உள்ள இன்ஜின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆனது கூடுதலாக ஹைபிரிட் ஹைபிரிட் ஆப்சனும் இடம் பெறக்கூடும்.
அடுத்ததாக சிட்ரோன் eC3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் வெர்ஷன் மாடலை பொறுத்தவரை 154 hp பவரை வழங்குகின்ற எலக்ட்ரிக் மோட்டார் ஆனது முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 420 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7 இருக்கை பெற்ற சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஐரோப்பா சந்தையில் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படலாம். இந்திய சந்தையில் சிட்ரோன் பசால்ட் கூபே மாடலை வெளியிட உள்ளது.
Follow Automobile News in Tamil on Google News