இந்தியாவின் முன்னணி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ICE மாடல்களையும் தமிழ்நாட்டில் உள்ள ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை தயாரிக்கும் திறனுடன் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக ரூ.9,000 கோடி முதலீடு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகியிருந்த நிலையில், தற்பொழுது தயாரிப்பு தொடர்பான திட்டங்கள் வெளியாகியுள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர்
ஜாகுவார் லேண்ட்ரோவரின் Electrified Modular Architecture (EMA) பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்ட மாடல்களை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மற்றொரு எலக்ட்ரிக் வாகன முதலீடாக கருதப்படுகின்றது.
தமிழ்நாட்டில் பல்வேறு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் தொழிற்சாலையை துவக்கியுள்ள நிலையில் கூடுதலாக சில நிறுவனங்கள் ஆரம்ப கட்ட பணிகளை துவங்கியுள்ளது.
இந்த ஆலையில் 75 % JLR கார்களும் மீதமுள்ள 25 % டாடாவின் பிரீமியம் எலக்ட்ரிக் கார்களும் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கூடுதலாக வேலைவாய்ப்பு உருவாகும்.
இங்கிலாந்தை தொடர்ந்து முதன்முறையாக மிகப்பெரிய JLR ஆலை தமிழ்நாட்டில் அமைய உள்ளது.