T20 உலகக் கோப்பை 2024: எதற்கும் நான் ரெடி.. பதில் தந்த விராட் கோலி.. மாற்றத்துக்கு தயாராகும் BCCI

Virat Kohli vs BCCI: டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்கு முன்னதாக, பிசிசிஐ மும்பையில் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியது. பல்வேறு நிலைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டனர். குறிப்பாக விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா குறித்து பேசப்பட்டது. ஐபிஎல் 2024 சீசனில் போது விராட் கோஹ்லியின் ஸ்டிரைக் ரேட் குறித்த விவாதிக்கப்பட்டதாகவும், அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் சீரற்ற பேட்டிங் ஃபார்ம் மற்றும் அவரின் பந்துவீச்சு செயல்திறன் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிகின்றன. 

மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தின் போது, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் தனது பங்கு குறித்து விராட் கோலி தெளிவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐபிஎல் 2024 தொடரில் இதுவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது ஃபார்மில் சரிவை சந்தித்து வருவதால், ஜூன் மாதம் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் பேட்டிங் செய்ய விராட் கோஹ்லிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2024 தொடருக் தனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அணிக்காக விராட் கோலி  தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி வருகிறார். மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் பட்டியலில் முன்னணியில் உள்ளார். எனவே, அனுபவமிக்க பேட்ஸ்மேனான விராட் கோலி  இந்திய அணிக்கு சிறந்ததாக தொடக்க ஆட்டக்காரராக இருப்பார் என தேர்வுக் குழு கருதுகிறது. மறுபுறம் இந்த சீசனில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மான் கில், டி20 உலகக் கோப்பைக்கான பேக்அப் ஓப்பனிங் தேர்வாக கருதப்படுவதாக கூறப்படுகிறது.

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்

டி20 கிரிக்கெட்டில், விராட் கோலி ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக 161 ஸ்டிரைக்-ரேட்டைப் பெற்றுள்ளார். அவரது ஒட்டுமொத்த ஸ்டிரைக் ரேட் 138 ஐ விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சிக்கல்.. மீண்டு வருவார்?

டி20 உலகக் கோப்பை 2024 இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோஹ்லி சேர்க்கப்படுவது யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாய்ப்புகளை மட்டுப்படுத்தலாம். இருப்பினும், டி20 உலகக் கோப்பைப் பட்டியலை பிசிசிஐ தேர்வுக் குழு இறுதி செய்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்த காலகட்டத்தில், ஜெய்ஸ்வால் தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்பினால், இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கலாம். 

டி20 உலகக் கோப்பை 2024 அட்டவணை

2024 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்கிறது

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் என மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. 

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் விளையாடும் அணிகளின் விவரம்

இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, நேபாள், நெதர்லாந்து, நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, உகாண்டா, கனடா

டி20 உலகக் கோப்பை 2024: எந்த பிரிவில் எந்த அணி?

குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா,

குரூப் பி: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன், 

குரூப் சி: நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாப்புவா நியூ கினியா,

குரூப் டி: தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம்

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப்போட்டி எப்பொழுது?

இந்தப் போட்டிகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறும். ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 24 ஆம் தேதி வரை சூப்பர் 8 சுற்று நடைபெறும். ஜூன் 26 ஆம் தேதி முதல் அரையிறுதிப் போட்டியும், 27 ஆம் இரண்டாவது அரையிறுதிப் போட்டியும் நடத்தப்படும். உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் தேதி டல்லாஸில் நடத்தப்படும். 

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் விவரம்

உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் 4 போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும், ஒரு போட்டி ஃப்ளோரிடா நகரிலும் நடத்தபப்டும். அனைத்து போட்டிகளும் இரவு 8.30 மணிக்கு தொடங்கும்.

ஜூன் 5: இந்தியா vs அயர்லாந்து

ஜூன் 9: இந்தியா vs பாகிஸ்தான்

ஜூன் 12: இந்தியா vs அமெரிக்கா

ஜூன் 15: இந்தியா vs கனடா

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.