இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்…!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. உலக அரங்கில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியாவில் ஜனநாயக திருவிழாவான தேர்தல், 6 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று(ஏப்., 19) முதல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேக்கட்டமாக இன்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற காலை முதலே ஆர்வம் காட்டி உள்ளனர். திரைப்பிரபலங்களும் காலை முதலே ஓட்டளித்து வருகின்றனர்.
* நடிகர் ரஜினிகாந்த் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
* நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
* நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு காலையில் முதல் ஆளாக வந்து ஓட்டளித்தார்.
* நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி உடன் வந்து சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
* நடிகர் விஜய் சேதுபதி சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
* சென்னை, தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் இயக்குனர் பாரதிராஜா அவரது மகனும், நடிகருமான மனோஜ் ஆகியோர் ஓட்டளித்தனர்.
* நடிகரும், அமைச்சருமான உதயநிதி தனது மனைவியும் இயக்குனருமான கிருத்திக்கா உதயநிதி உடன் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
* நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். இதேப்போல் ஐஸ்வர்யா ரஜினியும் இந்த பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
* நடிகை குஷ்பு தனது கணவர், இயக்குனர் சுந்தர் சி மற்றும் இரு மகள்கள் உடன் சென்னை, பட்டினம்பாக்கத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
ஓட்டளித்த மற்ற திரைப்பிரபலங்கள்…
சசிகுமார்
அதிதிபாலன்
வரலட்சுமி சரத்குமார்
கார்த்திக்
கவுதம் கார்த்திக்
இயக்குனர் வெற்றிமாறன்
காளி வெங்கட்
பிரசன்னா – சினேகா தம்பதியர்
உறியடி விஜயகுமார்
த்ரிஷா
இயக்குனர் ஹரி – நடிகை ப்ரீத்தா தம்பதியர்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
யோகிபாபு