இலங்கை அஞ்சல் திணைக்களம் குறுஞ் செய்தி சேவைகளைப் (SMS) பயன்படுத்துவதில்லை – தபால் மா அதிபரின் விசேட அறிவித்தல்

உள்நாட்டு அல்லது வெளிநாட்டுப் பொதிகள் கிடைக்கப் பெற்றதை அறிவிப்பதற்கு இலங்கை அஞ்சல் சேவை எவ்விதக் குறுஞ் செய்தி (SMS) களையும் பரிமாறுவதில்லை என்றும் போலி இணையத்தளங்களின் ஊடாக அநாமதய கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அஞ்சல், இலங்கை அஞ்சல் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்ற பெயர்களைத் தாங்கி இப்போலி இணையத்தளங்கள் செயற்படுவதாகவும் அவ்வாறான இணையத் தளங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வித கடனட்டைகளின் தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் உதவிச் சேவை 1950, தகவல் தொழில்நுட்பப் பிரிவு 0112542104, 0112334728, 0112335978, 0112687229, 0112330072 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.