ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ஓட்டளிக்கும் உரிமை என்பது அனைத்து குடிமகனுக்கும் முக்கியமான கடமையாகும். அதனால் 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக ஓட்டளிக்க இருப்பவர்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இளைஞர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெற்று உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடி ஓட்டளிக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.