நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவுக்கு கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். அதிக யூசர்களை கொண்ட நிறுவனமாகவும் இருப்பதால் ஜியோ நிறுவனம் அவ்வப்போது அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பல்வேறு ரேஞ்சுகளில் ரீச்சார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்தவகையில், நீங்கள் இலவச நெட்ஃபிக்ஸ், இலவச அழைப்புகள் மற்றும் முழு டேட்டாவைப் பெறும் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், ஜியோவின் இந்தத் திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு ரூ.18 செலவழித்து 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளின் பலனைப் பெறுகிறீர்கள். எனவே இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகச் பார்க்கலாம்:
ஜியோவின் ரூ.1499 இலவச நெட்பிளிக்ஸ் திட்டம்
ஜியோவின் ரூ.1499 திட்டத்தில், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினமும் 3 ஜிபி டேட்டாவையும் பெறுகிறார்கள். இதன் மூலம், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 252ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் சிறப்புப் பலன்களைப் பற்றி பேசுகையில், இது Netflix (அடிப்படை), JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான சப்ஸ்கிரிப்சன் பெறலாம். திட்டத்தில் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, வேகம் 64 Kbps ஆக குறையும். ஜியோசினிமாவின் பிரீமியம் சந்தா, இந்த திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்கள்.
பேஸிக் நெட்பிளிக்ஸ் பிளான் விலை
Netflix இன் பேஸிக் திட்டத்தின் விலையைப் பற்றி நாம் பேசினால், Netflix க்கு நீங்கள் மாதத்திற்கு 199 ரூபாய் செலவழிக்க வேண்டும். இது ஜியோ திட்டத்தில் இலவசம். Netflix இன் இந்த திட்டம் 720p (HD) வரை தெளிவுத்திறனை ஆதரிக்கிறது. டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன் மற்றும் டேப்லெட் உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் இந்தத் திட்டத்தை இயக்க முடியும். ஒரு நேரத்தில் ஒரு ஸ்கிரீனில் மட்டுமே மூவீஸ் அல்லது வெப்சீரிஸை பார்க்க முடியும்.
Netflix இலவசம்
ஜியோவின் ரூ.1099 திட்டமானது நெட்ஃபிக்ஸ் மொபைல் சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் போன்ற பல ஜியோ ஆப்களின் பலன்களைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும்.