திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பறவை காய்சல் பரவத்தொடங்கி உள்ளதால், ஆலப்புழா மாவட்டத்தில் ஒருவாரம், இறைச்சி, முட்டை விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி இறைச்சி விற்பனைக்கு தடை போடப்பட்டுள்ளது. கேரள மாநலிம், ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது, மேலும் பரவாமல் இருக்க, அங்குள்ள பறவைகளை அழிக்க மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பறவை காய்ச்சல் பாதித்த குட்டநாட்டில் கால்நடை பராமரிப்புத் துறையின் (ஏஎச்டி) விரைவுப் பதிலளிப்புக் குழுக்கள் […]