சென்னை: ரசிகர்களின் அன்பு தொல்லையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே நடிகர் அஜித் 7 மணிக்கு எல்லாம் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் அஜித் தனக்கு பின்னாடி வந்து விட்டு முன்னாடி ஓட்டுப் போட எப்படி செல்லலாம் என சீனியர் சிட்டிசன் ஒருவர் வாக்கு வாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.