நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டிய நேரமிது. காலை முதல் மக்கள் வாக்குசாவடிகளில் நின்று ஓட்டு போடத் தொடங்கியுள்ளனர். தமிழத்தின் 39 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகள் நம்மை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், வாக்களிக்கச் செல்லும் மக்கள் பெரும்பாலும் கூட்டத்தை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். காலையிலேயே சென்று ஓட்டு போட்டுவிடலாமா அல்லது கூட்டம் குறைந்த பின் மாலை சென்று ஓட்டு போடலாமா என சிந்தித்து கொண்டே இருப்பார்கள்.
இதற்கான ஒரு தீர்வாக தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மக்கள் வாக்குசாவடியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை வீட்டில் இருந்தபடியே அறிந்து கொள்ளலாம்.
https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதள பக்கத்தில், மாவட்டத்தின் பெயர், நீங்கள் ஓட்டு போடவுள்ள வாக்குச்சாவடியின் விவரங்களைப் பதிவு வேண்டும். அப்போது அங்கு எத்தனை பேர் ஓட்டு போட வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் காட்டப்படும்.
வாக்குச்சாவடியில் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும், அதோடு கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.