தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படுகின்ற குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து ஆனந்தமாக பொழுதை கழிப்பதற்காக குடும்பம் குடும்பமாக இங்கு வருவார்கள். ரம்மியமான சூழலில் பன்னீர் தெளிப்பது போன்ற சாரல் மழையில் நனைந்து அருவிகளில் குளித்து மகிழ்வர். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அனுபவத்தை பெறுவதற்கு குற்றாலம் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக கருதப்படுகிறது.
மேலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் வருகை குற்றாலத்தில் அதிகமாக இருக்கும். வருடத்தில் 5 மாதங்கள் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருவதால் குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் என்பது மிகவும் மோசமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் ஆனாலும் சரி திருக்குற்றால நாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் ஆனாலும் சரி, சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை தராமல் தங்களது வருமானத்தை பெருக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறனர் என குற்றச்சாட்டு அவ்வப்போது எழும்.
பேரூராட்சி நிர்வாகம் அருவி கரை பகுதிகளிலும் வாகனம் நிறுத்தும் இடங்களிலும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு, அளவுக்கு அதிகமாக கடைகளை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கி இடையூறு ஏற்படுத்துகிறார்கள் என்கிறார்கள். குற்றாலக் கோயில் நிர்வாகமோ ஒரு படி மேலே போய் குற்றாலநாதர் கோவிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அதன் புராதன பெருமைகளை கெடுக்கும் வகையில் சட்டத்துக்கு புறம்பாக கடைகளை குத்தகைக்கு விடுகிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான தற்காலிக கடைகளை ஏலம் விடுவதில் சில உள்ளூர் நபர்களை இடைத்தரகர்களாக வைத்துக் கொண்டு கடைகளை பங்கிட்டு வியாபாரிகள் நேரடியாக ஏலம் எடுக்க முடியாத நிலை உள்ளது என்றும் சொல்கிறார்கள்.
அந்த அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பெரும் தீ விபத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட கடையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி பெரும் தீ விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் ஐந்து பேர் தவிர மற்றவர்கள் தங்கள் பாதிக்கப்பட்டதை கூட வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்களாம்.
ஏனென்றால் இவர்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்திடம் இருந்து நேரடியாக கடைகளை ஏலம் எடுக்காமல் இடைத்தரகர்கள் மூலமாக கடைகளை பெற்று நடத்தி வந்தவர்கள் மொத்தம் பாதித்த 30க்கும் மேற்பட்டவர்களில் ஐந்து பேர் மட்டுமே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிவாரணம் கேட்டு வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. உயர் நீதிமன்றம் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்ட தனிக்கதை.
இதனிடையே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளில் கம்பி தகரம் போன்ற இரும்பு கழிவுகள் அப்புறப்படுத்த படாமல்கோவிலுக்கு தென்புறம் குவித்து வைக்கப்பட்டுள்ளது அதிலே உள்ள துரு பிடித்த ஆணிகள் சிறு இரும்புகள் துண்டுகளஅந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதங்களை குத்தி காயப்படுத்த வாய்ப்பிருப்பதால், சுற்றுலா பயணிகளின் அந்த இரும்பு கழிவுகளை திரு குற்றால நாதசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY