சென்னை: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், பல கிராம மக்கள், மாநிலஅரசின் நடவடிக்கைக்கு எதிராக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், படித்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் சென்னையில் மாநிலத்திலேயே குறைந்த அளவிலான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்ற வாக்குப்பதிவில் 60 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த தேர்தல்களை விட குறைவு. குறிப்பாக சென்னையில் வாக்குப்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. […]