நாம் வாழ்வது பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானா ? – நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம்

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா, பெங்களூருவில் கன்னட மொழியில் பேசிய தன்னுடைய கணவரை உள்ளூர் கன்னடவாசிகள் பலர் துன்புறுத்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு `நாம் வாழ்வது பாகிஸ்தானா..ஆப்கானிஸ்தானா என்று ஆவேசமாக கேள்வியெழுப்பி உள்ளார்.

இதுகுறித்து நடிகை ஹர்ஷிகா பூனாச்சா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நானும் எனது கணவரும் எங்களின் குடும்பத்தினருடன் பெங்களூருவின் ப்ரேசர் நகர்ப்பகுதிக்கு அருகில் உள்ள புலிகேஷி நகரில் உள்ள உணவகத்திற்கு இரவு உணவு சாப்பிட சென்றோம். பின் புறப்படுவதற்காக அங்கிருந்து எங்கள் காரை எடுத்துச் செல்ல முயன்றபோது, இரண்டு நபர்கள் காரின் ஜன்னல் அருகே வந்தனர். ‘உங்கள் காரை பின்புறம் எடுத்தால் அது எங்கள் வாகனத்தின் மீது இடித்து விடும்’ என்று கூறினார்கள். நாங்களும் அவர்களை மதித்து, எங்கள் காரை சிறிது முன்னோக்கி நகர்த்தினோம். அச்சமயம், அவர்கள் எங்களை அநாகரிகமாக பேசினார்கள்.

என் கணவரை அடிக்க முயன்றார்கள். அப்போது திடீரென என் கணவரின் தங்கச்சங்கிலியை பறித்தார்கள். என் கணவர் அதை விடாமல் பிடித்து இழுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.அப்போது, நாங்கள் கன்னடத்தில் பேசுவதுதான் அவர்களுக்குப் பிரச்சினை என்பதை கவனித்தேன். நானும், என் கணவரும் கன்னடத்தில் மட்டுமே பேசியது அவர்களை மேலும் ஆத்திரமடையச் செய்தது.

பின்னர், அந்தப் பகுதியில் எனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரிக்கு போன் செய்ததும், எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து சிதறிவிட்டனர். அதைத்தொடர்ந்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியிலிருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் உமேஷிடம் நடந்த சம்பவத்தை விவரித்தோம் நாம் பெங்களூருவில் உள்ளூர்வாசிகளான நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கிறோமோ… நாம் வாழ்வது பாகிஸ்தானிலா அல்லது ஆப்கானிஸ்தானிலோ. என தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.