இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!

T20 World Cup Squad: மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 20 அணிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தங்கள் அணிகளை மே முதல் வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும்.  இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் 15 பேர் கொண்ட அணியை இறுதி செய்ய பலவித பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது.  2024 டி20 உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை. தற்போதைய தகவல் படி, மிடில் ஆர்டரில் நம்பர் 3ல் சூர்யகுமார் யாதவ், நம்பர் 4ல் ரிஷப் பந்த், நம்பர்5ல் துபே, நம்பர் 6ல் ஹர்திக் பாண்டியா, நம்பர் 7ல் ஜடேஜா ஆகியோர் களமிறக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த அணியை பிசிசிஐ தேர்வு செய்தால் இளம் வீரர்களான ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் போன்றறோருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும். அதே சமயம் அனுபவம் வாய்ந்த கேஎல் ராகுலும் இந்த லிஸ்டில் உள்ளார். இதனால் யாரை தேர்வு செய்வது என்று பிசிசிஐ கடும் குழப்பத்தில் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி ஓப்பனிங்கில் இறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 361 ரன்களுடன் 147.34 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முன்னணியில் உள்ளார். மேலும் கேப்டன் ரோஹித் சர்மாவு 7 போட்டிகளில் 297 ரன்களுடன் 164.08 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார். இந்த சீசனில் விராட் கோலி மற்றும் ரோஹித் என இருவரும் சதம் அடித்துள்ளனர்.  

ஷுப்மான் கில், 7 போட்டிகளில் 151.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 263 ரன்கள் அடித்துள்ளார். மேலும், இஷான் கிஷன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர்ஜ்.  ​ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடினாலும் தற்போது டி20ல் ரன்கள் அடிக்கவில்லை. ஜெய்ஸ்வால் 7 போட்டிகளில் 121 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். விக்கெட் கீப்பர் போட்டியில் பலர் இருந்தாலும் ரிஷப் பந்திற்கு முன்னுரிமை வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மற்றொரு விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் 204 ரன்களை எடுத்துள்ளார். இதனால் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகியோரை முந்தி ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

அதே சமயம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓப்பனிங் செய்வது இறுதி செய்யப்பட்டால் ஜெய்ஸ்வால் அல்லது கில் ஆகியோரில் ஒருவர் பெயர் டி20 உலக கோப்பையில் இருந்து நீக்கப்படலாம்.  15 பேர் கொண்ட அணியை மே 1ம் தேதிக்குள் பிசிசிஐ அறிவிக்க வேண்டும். ஏப்ரல் 27ம் தேதி அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு டெல்லியில் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது.  அதில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தற்போது 10 வீரர்களின் பெயர்கள் உறுதியப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கான தேர்வில் தான் குழப்பம் நீடிக்கிறது.  ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் ஆகியோர் பெயர்கள் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.