உலகம் பூராகவும் சுற்றாடல் பாதுகாப்பிற்காக ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக பூமி தினம், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இம்முறை “பூமி மற்றும் பிளாஸ்டிக்” எனும் தொனிப்பொருளில் 2040ஆம் ஆண்டளவில் பிளாஸ்டிக் பாவனையை 60வீதத்தினால் குறைப்பதை நோக்காகக் கொண்டு இம்முறை சர்வதேச பூமி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அமெரிக்கா உட்பட 196 இற்கும் அதிகமான உலக நாடுகள் இப்பூமி தினத்தை அனுஷ்டிக்கின்றன.
சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை, அழகு மிக்க பூமியின் மீதான வாழ்க்கையின் அவசியத்தை வெளிப்படுத்துவதற்காக இப்பூமி தினம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்று அதில் பூமியில் நிலவும் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான தன்மையின் அத்தியவசியத்தைக் குறிப்பிடலாம்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இப்பூமி தினத்தை அனுஷ்டிப்பதற்காக மரநடுகைக்கு முன்னுரிமை வழங்கியுள்ளன. சுழல் மாசுபடுதலுக்குச் செல்வாக்குச் செலுத்துதல் தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்துதலும், எதிர்கால சந்ததிக்காக பூமியை எவ்வாறு பங்களிப்பது என்பது தொடர்பாக முழு உலக மக்களையும் விழிப்புணர்வூட்டுவதற்கு இப்பூமி தினத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.