புதுடெல்லி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்குச் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி கடிதம் எழுதி உள்ளார். கடந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிதிமன்றம் சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் […]