ஐபிஎல் 2024 தொடரை புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, அதிரடியாக கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இது அந்த அணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ அணியில் இருந்து வெளியேறி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இரண்டு ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக விளையாடினார். அந்த இரண்டு தொடர்களிலும் குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும், ரன்னர் அப் இடத்தையும் பிடித்தது. இதனால் பாண்டியாவை மும்பைக்கு பல கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து மீண்டும் அழைத்து வந்தது.
ஆனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எதிர்பார்த்த ரிசல்ட் ஐபிஎல் 2024 தொடரில் கிடைக்கவில்லை. முதல் மூன்று போட்டிகளிலும் வரிசையாக தோல்வியை சந்தித்த அணி அடுத்த இரண்டு போட்டிகளில் அடுத்தது வெற்றி பெற்றது. பின்னர் மீண்டும் தோல்வி பாதைக்கு சென்று அடுத்த போட்டியில் வெற்றி பெற்றது. அதாவது, ஐபிஎல் 2024 தொடரில் 7 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
இதற்கு காரணம் அந்த அணியின் பேட்டிங் லைன் அப். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினாலும், இஷான் கிஷன் பேட்டில் இருந்து எதிர்பார்த்த ரன்கள் இன்னும் வரவில்லை. ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் மிக மோசமான பார்மில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மும்பையிடம் பேட்டிங் பிளேயர்கள் இல்லாமல் இல்லை. சூப்பரான இளம் பிளேயர்கள் எல்லாம் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேக்ஸ்வெல், பொல்லார்டு ஆகியோருக்கு இணையாக பேட்டிங் ஆடக்கூடிய டெவால்ட் பிரெவீஸ் இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்.
அவரைப் போன்ற இளம் வீர ர்களுக்கு வாய்ப்பளிக்கும்பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் பலமாக வாய்ப்பு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஷிவம் துபே, சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி, அப்துல் சமத், டெல்லி அணியில் அறிமுகமாகியிருக்கும் மெக்குர்க் ஆகியோர் இந்த ஐபிஎல் போட்டியில் அதிரடி வாண வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போல் டெவால்ட் பிரெவீஸூக்கும் வாய்ப்பளித்தால், அதனை பயன்படுத்தி அவரும் அதிரடியாக ஆடினால் மும்பை அணிக்கு சேஸிங்கில் இந்த ஐபிஎல் தொடரில் கில்லியாக மாறும்.