பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகளை நிருமாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஆறு மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வீடுகள் நிருமாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்தார்.
ஒரு வீட்டிற்கு 28இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதேச செயலகங்கள் மற்றும் தோட்ட நிருவாகங்களின் ஊடாக இந்த வீட்டுத்திட்டத்திற்குப் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
வீட்டுத் திட்ட நிருமாணப் பணிகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இரண்டு வருடங்களில் பத்தாயிரம் வீடுகளை மக்களுக்குக் கையளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி சுட்டிக்காட்டினார்.