சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், அந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில், 2002ம் […]