‘வசத் சிரிய – 2024’ போட்டிகளில் பங்கேற்க பெருமளவானோர் விண்ணப்பம்

ஏப்ரல் 27 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நடைபெறவுள்ள ‘வசத் சிரிய – 2024’ சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கைகோர்த்து வருகின்றனர். புத்தாண்டு அழகன் மற்றும் அழகி, மரதன் ஓட்டம் மற்றும் மிதிவண்டி சவாரி ஆகிய போட்டிகளுக்காக பெருமளவு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

பல்வேறு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பில் இருந்து தூர பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் இப்போட்டிகளில் பங்கேற்க முன்வந்துள்ளமை விசேட அம்சமாகும்.

உள்நாட்டு கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் பல அம்சங்களை உள்ளடக்கிய அரச பிரிவு, திறந்த பிரிவு மற்றும் விருந்தினர் பிரிவு ஆகிய 03 பிரிவுகளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘வசத் சிரிய’ புத்தாண்டு அழகர்-அழகி போட்டிகளில் பங்கேற்க18-30 வயதுக்குட்பட்ட இளம் இளைஞர் யுவுதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வசத் சிரிய புத்தாண்டு அழகர்-அழகி போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் இரண்டாம் இடம் பெறுபவருக்கு 75 ஆயிரம் ரூபாவும் மூன்றாமிடத்திற்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். 12 ஆம் இடம் வரை பெறும் போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசிலும் சான்றிதழும் வழங்கப்படும்.

வசத் சிரிய 2024 புத்தாண்டு அழகன் மற்றும் அழகி போட்டிகளுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் இறுதித் திகதி (23) நாளையுடன் நிறைவடைகிறது.

ஸ்டாண்டர்ட் சைக்கிள் ஓட்டப் போட்டி (ஆண்கள்) முதல் இடத்திற்கு ரூ.100,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.75,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.50,000, நான்காம் இடத்திற்கு ரூ.35,000, ஐந்தாம் இடத்திற்கு ரூ.20,000, 06 முதல் 10 இடங்களுக்கு தலா ரூ.10,000 மற்றும் 11 முதல் 20 இடம் வரையான இடங்களை பெறுவோருக்கு ரூ.6,000. வீதம் வழங்கப்படும்.

பெண்களுக்கான போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு 60,000 ரூபாயும், இரண்டாம் இடத்துக்கு 40,000 ரூபாயும், மூன்றாம் இடத்துக்கு 30,000 ரூபாயும், நான்காம் இடத்துக்கு 20,000 ரூபாயும், ஐந்தாம் இடத்துக்கு 15,000 ரூபாயும், 06 முதல் 10ஆம் இடங்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும்.

வசத் சிரிய மரதன் ஓட்டப் போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் பங்குபற்ற முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் தெளிவான புகைப்படத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் பாதுகாப்பு பிரிவின் 0710573828 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்ப முடியும். 2024 ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

மரதன் ஓட்டப் போட்டியில் (ஆண்கள்) முதல் இடத்திற்காக ரூ.75,000வும் இரண்டாம் இடத்திற்கு ரூ.50,000 உம், மூன்றாம் இடத்திற்கு ரூ.30,000 உம், நான்காம் இடத்திற்கு ரூ.20,000உம் ஐந்தாம் இடத்திற்கு ரூ.15,000 உம் ஆறு முதல் பத்தாம் இடம் வரை தலா ரூ.10,000 உம் பதினொன்றாம் இடத்திலிருந்து பதினைந்தாம் இடத்துக்கு தலா 5,000 ரூபாவும் வழங்கப்படும். .

மகளிருக்கான மரதன் போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு 50,000 ரூபாயும், இரண்டாம் இடத்துக்கு 30,000 ரூபாயும், மூன்றாம் இடத்திற்கு 20,000 ரூபாயும், நான்காம் இடத்துக்கு 15,000 ரூபாயும், ஐந்தாம் இடத்துக்கு 10,000 ரூபாயும், ஆறு மற்றும் ஏழாவது இடங்களுக்கு 7,500 ரூபாயும் எட்டாவது முதல் பத்தாவது இடம் வரை தலா 5,000 ரூபாவும் வழங்கப்படும்.

மேலும், கடினமான காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் கட்டியெழுப்பப்படும் நாட்டின் கௌரவமான முன்னோக்கிய பாதை உட்பட இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இலங்கையின் கலாசாரம் மற்றும் கடந்த கால பாரம்பரியத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் பல அம்சங்களுடன் “வசத் சிரிய 2024” புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது.

‘வசத் சிரிய-இசை நிகழ்ச்சி’அன்றிரவு 7.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிரபல பாடகர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.