சென்னை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்குப்பதிவு குழப்பம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தமிழகத்தில் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஒரு சில தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கி ஓட்டுப்பதிவு அளிக்கப்பட்டதால் இரவு 7 மணி வரை தொடர்ந்தது. எனவே அன்று இரவு நிலவரப்படி உத்தேச தகவல்கள் வெளியிடப்பட்டன. முதலில் தோராயமாக 72.09 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிறகு கடந்த தேர்தலை விட 2.5 சதவீதம் குறைந்து 69.46 சதவீதம் […]