உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவிலிருந்து கடந்த 19-ம் தேதி ரோஸா (Roza) என்ற இடத்தை நோக்கி சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டிருக்கிறது. அந்த ரயில் ஹர்டோய் பகுதியை அடைந்தபோது, வழக்கம்போல ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் ரயிலைச் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது, சரக்கு ரயிலின் இரண்டு சக்கரத்துக்கு நடுவில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்திருக்கிறான். இதைப் பார்த்து அதிர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள், சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர்.
मालगाड़ी के पहियों के बीच बैठकर #हरदोई पहुँचा बच्चा !!#आरपीएफ़ ने किया रेस्क्यू, रेलवे ट्रैक के किनारे रहने वाला है मासूम !!
खेलते खेलते ट्रैक पर खड़ी मालगाड़ी पर चढ़ा, मालगाड़ी चल दी और बच्चा नहीं उतर पाया !!
रेलवे सुरक्षा बल के जवानों ने बच्चे को उतारा, बच्चे को चाइल्ड केयर… pic.twitter.com/By2c9UqJFq
— MANOJ SHARMA LUCKNOW UP (@ManojSh28986262) April 21, 2024
அதைத் தொடர்ந்து, குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவலளிக்கப்பட்டு, அவர்களின் பராமரிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக வெளியான தகவலில், லக்னோவின் ஆலம் நகர், ராஜாஜி புரத்தில் உள்ள பாலாஜி கோயில் அருகே வசிப்பவர் பூரன். இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். மனைவி பிரிந்து சென்றதால், யாசகம் பெற்று குழந்தைகளை வளர்த்து வருகிறார் பூரன்.
இந்த நிலையில், தனியே விளையாடிக்கொண்டிருந்த அஜய் லக்னோவில் நின்றிருந்த சரக்கு ரயிலில் விளையாட்டுக்காக ஏறியிருக்கிறார். அப்போது ரயில் புறப்பட்டிருக்கிறது. இறங்குவதற்குப் பயந்து, சிறுவன் சுமார் 100 கி.மீ தூரம் பயணித்திருக்கிறார். ஹர்டோய் பகுதியில் ரயில் நின்றிருக்கிறது. அப்போதுதான் பாதுகாப்புப் படை வீரர்கள் சிறுவனை மீட்டிருக்கிறார்கள். சிறுவனை அவனின் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs