மகளுக்குத் திருமணம் என்றாலே பொதுவாகப் பெற்றோர்கள் திருமணத்தில் உற்சாகமாக இருப்பார்கள். ஆனால் ஆந்திராவில் திருமண மேடையிலிருந்து மகளை மணமகள் குடும்பத்தார் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் கடையம் பகுதியைச் சேர்ந்த சினேகாவும், பட்டின வெங்கடானந்தும் கல்லூரியில் ஒன்றாகப் படிந்து வந்திருக்கின்றனர்.
இதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, மணமகன் வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவுக்கு மணமகளின் குடும்பத்தாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மணமகளின் குடும்பத்தாரும் உறவினர்களுடன் வந்து இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், விழா மேடையில் மணமகனுடன் இருந்த மணமகளை, மணமகளின் தாயும், அவரின் சகோதரரும் வலுக்கட்டாயமாக மேடையிலிருந்து இழுத்துச் சென்றிருக்கின்றனர். இதைப் பார்த்த மணமகன் வீட்டார், அவர்களைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் மீது மிளகாய் பொடியைத் தூவியிருக்கின்றனர்.
இதனால், வரவேற்பு மேடை களேபரமானது. ஆனாலும் மணமகன் வீட்டார், மணப்பெண்ணை மீட்டிருக்கிறார்கள். இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மணப்பெண்ணின் குடும்பத்தாரின் இந்த செயலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs