சென்னை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின்போது, சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார். மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் முடிவடைந்த நிலையில், வரும் 26ம் தேதி 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். […]