கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் லூலு ரீடர்ஸ் ஃபெஸ்ட் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருவனந்தபுரம் சிட்டிங் எம்.பி-யும் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளருமான சசி தரூர், நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினர். பின்னர் திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ராஜாவாக இருக்கிறார். தன்னை எதிர்த்து யாராவது குரல் எழுப்பினால் ராஜாவுக்கு பிடிக்காது. அந்த ராஜாவிடம் கேள்விகளை எழுப்புகிறவர் சசி தரூர் ஆவார். நான் காங்கிரஸ் கட்சிக்காரன் இல்லை. ஆனாலும் சசி தரூரை ஆதரிக்கிறேன்.

மோடி அரசியலை நம்பாத எனக்கு கேரளத்தின் மீது நம்பிக்கை உண்டு. மிகவும் நல்ல கோயில்களும், சர்ச்சுகளும், மசூதிகளும் கேரளத்தில் உள்ளது. ஆனால் கேரளா அரசியலில் கடவுள்கள் தலையிடுவதில்லை. அதனால்தான் எனக்கு தெய்வத்தின் சொந்த நாடாகிய கேரளா மிகவும் பிடித்தமான மாநிலமாக உள்ளது.
பெங்களூரில் இருந்து தப்பி ஓடிய ராஜீவ் சந்திரசேகர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக நான் திருவனந்தபுரத்திற்கு வந்துள்ளேன். கர்நாடகா மாநிலத்தில் 18 ஆண்டுகளாக எதுவும் செய்யாத ராஜீவ் சந்திரசேகர் இப்போது வளர்ச்சி என்ற வாக்குறுதியோடு திருவனந்தபுரத்தில் போட்டியிட வந்திருக்கிறார். பல கோடி ரூபாய் சொத்துள்ள மத்திய அமைச்சர் ஆவார் ராஜீவ் சந்திரசேகர். சசிதரூருக்கு எதிராக போட்டியிடும் அவர் ராஜாவுக்கு எதிராக குரல்கொடுக்கமாட்டார். பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் அனைவரும் பொய் சொல்லுபவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு வேட்புமனு தாக்கலின்போதும் ராஜீவ் சந்திரசேகர் பொய் சொல்வதில் மட்டும் உறுதியானவராக இருக்கிறார். ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று நம்பி வருகிறார் ராஜீவ் சந்திரசேகர்.

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான சசி தரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி மிகப்பெரிய தவறு செய்துள்ளது கம்யூனிஸ்ட் கூட்டணி. காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி ஆகிய இரண்டு கூட்டணிகளும் மாறி மாறி வாக்குகளை பிரித்தால் அது பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக அமையும். பா.ஜ.க-வின் சதியில் கம்யூனிஸ்ட் கூட்டணி விழாமல் இருந்திருக்கலாம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs