சினிமாவில் ஹீரோவாகும் சீரியல் நடிகர் : ஜோடி நடிகை யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீ தேவா. இவர் சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் புதிய தொடக்கம் என்று பதிவிட்டிருந்தார். இதுகுறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், அவர் திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே துணிவு திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக திவ்யா துரைசாமி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.