சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காமெடி, வில்லி, குணச்சித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் கலக்கி வருகிறார் நடிகை தீபா. குக் வித் கோமாளிக்கு நிகழ்ச்சிக்கு பின் தீபாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இந்நிலையில் சில தினங்களாக சின்னத்திரையில் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்த தீபா, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் தொடரில் செகப்பி என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். தீபாவின் என்ட்ரியால் தொடரின் கதையே மாறப்போவதாகவும் புரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.